கர்நாடக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மற்றும் மோடியையும் தவறாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கைது செய்யப்பட்டார்.
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கூறி மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி, மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளை தவறாகவும் மிகவும் காட்டமாகவும் பேசியிருந்தார்.
இதுகுறித்து ஏரிப்புறக்கரை வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜமால் உஸ்மானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.