பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா உயர் நீதிமன்றத்தைக் கண்டித்து
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமைப் பேச்சாளர் ஜமால் உஸ்மாணி கலந்து கொண்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகியோரை தரைகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்றிரவு திருக்கானூர்ப்பட்டி பிரிவு சாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்து-முஸ்லிம் இடையில் கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கிராம நிர்வாக அலுவலர் கௌரி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது அதிராம்பட்டினம் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி, மோடி குறித்து காட்டமான பேச்சு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் கைது
இந்நிலையில் ஜமால் உஸ்மானிகைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் எனவும் எச்சரித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.