Home /News /tamil-nadu /

இந்தியாவின் அவுட்லுக் டிராவலர் 2022 விருதை தட்டிச் சென்ற தமிழ்நாடு

இந்தியாவின் அவுட்லுக் டிராவலர் 2022 விருதை தட்டிச் சென்ற தமிழ்நாடு

நீலகிரிக்கு 2022 அவுட்லுக் டிராவலர் விருது

நீலகிரிக்கு 2022 அவுட்லுக் டிராவலர் விருது

இந்தியாவிலேலய சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான அவுட்லுக் டிராவேர் விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • The Nilgiris, India
    அவுட்லுக் டிராவலர் விருதுகள் 2022 இல், இந்தியாவின் சிறந்த மலை/மலைக் காட்சிகளுக்கான இடத்திற்கான வெள்ளி விருதை தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் குன்னூர் வென்றுள்ளது. தமிழ்நாட்டிற்கான வெள்ளி விருதினை, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார். இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

    அவுட்லுக் விருதுகள் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் தரத்தின் அளவுகோலை குறிக்கின்றன மற்றும் தொழில்துறையின் 360 டிகிரி பார்வையை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல ஆண்டுகளாக, இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோர்களை பல்வேறு கோணங்களில் ஈர்த்துள்ளது. சர்வதேச நோய் பரவலுக்குப்பின் சுற்றலாத்துறை சார்ந்த தொழில்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிலைப்படுத்துவதில் இந்த ஆண்டு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

    சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலம், சிறந்த வனவிலங்குத் தலம், சிறந்த சாகச தலம் மற்றும் சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட 11 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய சுற்றுலாத்துறையை சேர்ந்த முக்கிய நபர்களைக் கொண்டு விருதுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

    இந்த நிகழ்வில் சுற்றுலத்துறையில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் இலக்குகளைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் தொடர்பான குழு விவாதங்களும் நடைபெற்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Nilgiris, Travel

    அடுத்த செய்தி