• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?

தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?

Tangedco

Tangedco

வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் என 5 அனல்மின் நிலையங்களில் இன்னும் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.

  • Share this:
அனல் மின்சார உற்பத்திக்கு மூலதனமாக விளங்கும் நிலக்கரிக்கான தேவை, சர்வதேச சந்தையில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு நிலவும் மின்வெட்டு பிரச்னை அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சர்வதேச அளவில் நிலக்கரி சப்ளை செய்யும் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை பெறுவதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த காரணத்தால் தற்போது நிலக்கரி தேவை அதிகரித்து அதன் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

கரையும் கையிருப்பு:

தமிழகத்திலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால்,  தனியார் மற்றும் தமிழக மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சியின் கீழ் தொடங்கப்பட்டு இயங்கி வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் என 5 அனல்மின் நிலையங்களில் இன்னும் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழக மின்சார வாரியம், வல்லூர் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் நிலக்கரி சப்ளைக்காக நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் வைத்திருக்கின்றன. செப்டம்பர் மாதம் முதலே தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி சப்ளை பாதியாக குறைந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

Also read:  இந்திய அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஜாக்பாட் – ரமீஸ் ராஜா வெளியிட்ட ரகசியம்

பாதியாக குறைந்த சப்ளை:

தற்போது தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 60,265 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில், மின்வாரியத்துக்கு 36,255 டன் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்றைய (அக் 8) நிலவரப்படி 1.92 லட்சம் டன்கள் நிலக்கரி கையிருப்பு இருந்துள்ளது. இதனைக் கொண்டு அதிகபட்சமாக 4 நாட்கள் மட்டுமே சமாளிக்க இயலும். தூத்துக்குடியில் 2.6 நாட்கள் மட்டுமே இயங்கும் வகையில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேட்டூரில் உள்ள நிலக்கரியை வைத்து 3.4 நாட்களும், வடசென்னையில் 2.2 நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும். இந்த ஐந்து அனல்மின்நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 4320 மெகா வாட் ஆக உள்ளது.

தற்போது ஒரு யூனிட்டுக்கு 10 முதல் 15 ரூபாய் என்ற விலையில் ஒரு நாளைக்கு 20 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியமானது, மின் எக்ஸ்சேஞ்சில் இருந்து வாங்கி வருகிறது. மேலும் தமிழக நீர் மின் நிலைய உற்பத்தியும் 12 மில்லியன் யூனிட்களாக அதிகரித்திருக்கிறது ஆறுதல் தரக்கூடியதாகும்.

Also read:   ரூ.16 கோடிக்கு அந்த வீரரை வாங்கியும் வேஸ்ட் தான் – கவாஸ்கர் ஏமாற்றம்

நிலக்கரி தேவைக்காக தமிழக மின்சார வாரியம் மத்திய நிலக்கரி துறையினருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது இருப்பினும் இந்த மாதம் நிலவும் சூழல் அபாயகரமாக இருப்பதாக மின்சார வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்குமானால், மின்சார வெட்டு ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் வலியுறுத்தல்:

நிலக்கரி கையிருப்பு அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற நிலையில்,  இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி  மத்திய அரசின் நிலக்கரித்துறை அமைச்சருடன் பேசி தமிழகத்துக்குதேவையான நிலக்கரி விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டுமென எதிர்கட்சித் துணை தலைவரான ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also read:   IMPS பரிவர்த்தனைக்கான தினசரி வரம்பு ₹ 5 லட்சம் ஆக உயர்வு! RTGS – NEFT என்ன வேறுபாடு?

மேலும் இப்பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஒடிசா மாநிலம் சந்திரபிலானி நிலக்கரி தொகுதியிலிருந்து நிலக்கரி எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளித்து அங்கு மேம்பாட்டு பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: