நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பிப்.8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், நீட் சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டதுடன், விரைவில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பிப்.8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு செப்.13ந் தேதி சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.
அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பொருட்டு ஆளுநருக்கு அனுப்பினார்கள். ஆனால் ஆளுநரோ எனக்கு திருப்பி அனுப்பினார். பிப்ரவரி 3ம் தேதி அன்று பத்திரிகை செய்தியாக ராஜ்பவன் இதை வெளியிட்டது.
Also read: சென்னை ஆழ்கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்!!
இதனைத் தொடர்ந்து வருகின்ற 8ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மன்றத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
இரண்டாவது முறை மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும், நல்லதே நடக்கும் என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.