தென்மாவட்டங்களில் தொடர் மழை - நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாதிரிப் படம்
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 10:02 PM IST
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகள் நிரம்பியுள்ளன. நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தை தொட்டு தண்ணீர் செல்வதால் அந்த பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் காவல்துறையினர் மூடி சீல் வைத்தனர். மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை நீரும் ஆற்றில் கலந்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 45 ஆயிரம் கனஅடி தண்ணீருக்கு மேல்ஆற்றில் வெள்ள நீர் செல்கிறது
பாபநாசம் அணையிலிருந்து 12,480 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையிலிருந்து 21,406 ஆயிரத்து கன அடி தண்ணீரும் கடனா அணையிலிருந்து 2,449 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்லையில் தற்போதைக்கு வெள்ள ஆபத்து இல்லை. தொடர் மழையால் 188 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 87 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. 25 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
அதேபோல, தொடர் மழை காரணமாக பழனி சண்முக நதி ஆற்றில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மானூர், நரிக்கல்பட்டி, கீரனூர் உள்ளிட்ட சண்முகநதி ஆறு பாயும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. சண்முகநதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோரம் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. புதுக்கோட்டை, கரம்பகுடி, ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகின்றது.கலைமுதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை நீரும் ஆற்றில் கலந்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 45 ஆயிரம் கனஅடி தண்ணீருக்கு மேல்ஆற்றில் வெள்ள நீர் செல்கிறது
பாபநாசம் அணையிலிருந்து 12,480 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையிலிருந்து 21,406 ஆயிரத்து கன அடி தண்ணீரும் கடனா அணையிலிருந்து 2,449 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.