ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உதகையில் கடும் பனி மூட்டம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் கடும் பனி மூட்டம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை பனி

உதகை பனி

உதகை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிப்பு . 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உறைபொழிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது.

இதனால் கடும் குளிர் நிலவியது. சமவெளி பகுதிகளில் உறை பனி பொழிவு காணபடுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் உதகை,கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.

அதனுடன் சாரல் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி மூட்டம் காணப்படுகிறது.

குறிப்பாக உதகை நகரில் குதிரைப் பந்தயம் மைதானம், மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி ,தாவரவியல் பூங்கா ,குன்னூர் சாலை, தலைக்குந்தா, பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனி மூட்டம் காரணமாக காலையில் நகர பகுதிகள் முழுவதும் குறைவான மக்கள் நடமாட்டம்  காணபட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. ராணிப்பேட்டை நகர் பகுதிகளிலும், ஆற்காடு, கலவை, வாலஜாபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

இதையும் படிங்க: இன்றே கடைசி.. வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு

இதேபோல் சோளிங்கர், நெமிலி மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்தது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு சாலைகளிலும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். விபத்துகளை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணம் செய்தனர்.

பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஒருசில விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.

First published:

Tags: Ooty, Smog