தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,500 நெருங்கியது - 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,500 நெருங்கியது - 33 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று மட்டும் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கொரோனா பரவலின் வேகம் மிகவேகமாக உள்ளது. தமிழகத்திலும் கொரோனாவில் பரவல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ‘தமிழகத்தில் நேற்று மட்டும் 97,201 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அதன்மூலம் மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,71,384 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 4,920 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 8,96,749 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 13,032 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இன்று மட்டும் சென்னையில் 2,636 பேருக்கும், கோயம்புத்தூரில் 583 பேருக்கும், செங்கல்பட்டில் 795 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி 6,984 பேருக்கும், ஏப்ரல் 14-ம் தேதி 7819 பேருக்கும், ஏப்ரல் 15-ம் தேதி 7,987 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: