Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒரு நாளில் 95 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு- இறப்பு இல்லை

தமிழகத்தில் ஒரு நாளில் 95 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு- இறப்பு இல்லை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை நோக்கி சென்றது. ஜனவரி மாத இறுதி மற்றும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. முதல் இரண்டு அலைகள் போல அல்லாமல் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருந்தது. அதேபோல, மிக விரைவாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்துள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 41,859 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,51,910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று ஒரே நாளில் 223 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட்- 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு

    தற்போது கொரோனா பாதித்து 1,173 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரையில் கொரோனா பாதிப்பால் 38,023 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 35 பேருக்கும், கோயம்புத்தூரில் 10 பேருக்கும், செங்கல்பட்டில் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறைய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி