தமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் 3,949 பேர் பாதிப்பு: 62 பேர் உயிரிழப்பு

தமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் 3,949 பேர் பாதிப்பு: 62 பேர் உயிரிழப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 86,224 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று 30005 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 10,86,569 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 3,841 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 110 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் மொத்தமாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், மொத்த கொரோனா பாதிப்பு 86,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,212 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 47,749 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 1,141 பேர் உயிரிந்துள்ளனர்.


சென்னையில் மட்டும் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 187 பேருக்கும், திண்டுக்கலில் 64 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 75 பேருக்கும், மதுரையில் 290 பேருக்கும், திருவள்ளூரில் 154 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading