Home /News /tamil-nadu /

உதயநிதி உழைப்பால் தமிழ்நாடே பயன் பெற வேண்டும்.. அதற்கு முதல்வர் கனிய வேண்டும்.. எம்எல்ஏ பிரபாகரன் பரிந்துரை

உதயநிதி உழைப்பால் தமிழ்நாடே பயன் பெற வேண்டும்.. அதற்கு முதல்வர் கனிய வேண்டும்.. எம்எல்ஏ பிரபாகரன் பரிந்துரை

உதயநிதி உழைப்பால் தமிழ்நாடே பயன் பெற வேண்டும்..

உதயநிதி உழைப்பால் தமிழ்நாடே பயன் பெற வேண்டும்..

udayanidhi stalin | ஒரு கல் ஒரு கண்ணாடி வரும் போது சாதாரணமாக நினைத்தார்கள், ஆனால் இன்று ஒரு கல் செங்கல் வைத்து மத்திய அரசை எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி உழைப்பால் ஒரு தொகுதியோடு பயன் பெறுவதோடு, நின்று விடாமல் தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும், அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும் என பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டு துறைகள் மீது மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று பேசிய பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் பிரபாகரன், " ஒரு கல் ஒரு கண்ணாடி வரும் போது சாதாரணமாக நினைத்தார்கள், ஆனால் இன்று ஒரு கல் செங்கல் வைத்து மத்திய அரசை எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

    Must Read : கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

    அவரின் உழைப்பு ஒரு தொகுதியுடன் நின்று விட கூடாது, காலம் கனிந்து விட்டது அவர் உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும் அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும்" என பேசினார்.

    திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சட்டபேரவையில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் பேச்சு கவனத்தைப் பெற்றது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, MK Stalin, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி