கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் - ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியா, 1947-ம் ஆண்டிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டப் பிறகும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறுமையால், சாதியால் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தி ஆயுளுக்கும் அவர்களை அடிமைகளாக நடத்தும் சூழல் இன்றும் இருந்துவருகிறது. கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒருவர் அடிமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

  தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.


  இதுதொடர்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: