• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா!

27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா!

கொரோனா

கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்து தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 16,620 ஆக குறைந்து உள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தின் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,54,718 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் வந்தவர் ஆவர்.

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,16,381 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,719 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,64,820 பேர் கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,941 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதித்து தற்போது 16,620 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 177 பேருக்கும், கோயம்புத்தூரில் 186 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள்: அரசு தகவல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: