மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.
மூக்கு வழி வழங்கும் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து 'இன்கோவாக்' என்ற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இந்த மருந்தை முதல் இரண்டு தவணைகளாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது, முதல் இரண்டு தவணை தவணைகள் வேறு தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் ஆக இதை எடுத்துக் கொள்ள முடியும்.
உலகின் முதல் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து இதுவாகும். கடந்த 26ம் தேதி அறிமுகமாகிய இந்த மருந்து, அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நியூஸ்18க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Health and welfare department, Ma subramanian