ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டம் தொடரும் என அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டம் தொடரும் என அறிவிப்பு

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 ஆயிரத்து 370 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியம், அதற்குப் பின்பு சேர்ந்தவர்களுக்கு 5200 ரூபாயாக குறைக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தால் இந்த ஊதிய முரண்பாடு களையப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.

அதை நிறைவேற்றக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டர். இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷாவுடன் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. மேலும், கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உறுதியான தேதியை முதலமைச்சர் அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: DMK, Minister Anbil Mahesh