Home /News /tamil-nadu /

ஜூடோ மாஸ்டர் கெபிராஜ், ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ் - பாலியல் வழக்குகளின் நிலை என்ன?

ஜூடோ மாஸ்டர் கெபிராஜ், ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ் - பாலியல் வழக்குகளின் நிலை என்ன?

ஜூடோ மாஸ்டர் கெபிராஜ், ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ் - பாலியல் வழக்குகளின் நிலை என்ன?

சென்னையில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வழக்குகளில் தீவிரமாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜுடோ மாஸ்டர் கெபிராஜின் வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு, மூன்று நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மூன்று நாள் போலீஸ் காவல் முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக அவரிடம் 250 கேள்விகளுக்கு எழுத்துத்துப்பூர்வமாக போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சிறப்பு நீதிபதி சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    இதனிடையே, பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக, சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்டோரிடம் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

    சென்னை அண்ணா நகரில், தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜூடோ மாஸ்டர் கெபிராஜின் வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணை, போட்டி ஒன்றிற்கு அழைத்துச்சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு மூன்று நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாகராஜனிடம் விசாரனை நடத்த, 5 நாட்கள் அனுமதி கோரி பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு மூன்று நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Sexual harassment

    அடுத்த செய்தி