ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தித்திக்கும் பொங்கலுடன்.. தக தகக்கும் சூரியனை அறிவோம் - வாழ்த்து அட்டையை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை..!

தித்திக்கும் பொங்கலுடன்.. தக தகக்கும் சூரியனை அறிவோம் - வாழ்த்து அட்டையை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை..!

பொங்கல் வாழ்த்து அட்டயை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை

பொங்கல் வாழ்த்து அட்டயை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை

பொங்கலை முன்னிட்டு சூரிய பொங்கல் வாழ்த்து அட்டை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழர் திருவிழாவான தை பொங்கல் திருநாளில் பொங்கல், கரும்பு மற்றும் அனைத்து பொருட்களும் சூரியனுக்கு படைக்கப்படுகிறது. அதே நேரத்தில் சூரியனை பற்றிய அறிவியல் உண்மைகளை மாணவர்களிடத்தில், பொது மக்களிடத்தில் விளக்கும் விதத்தில், சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையை பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் கே. நந்தகுமார் IAS, நேற்று  சென்னையில் வெளியிட்டார்.

சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையை, பள்ளிக்கல்வித்துறை, விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை ,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு ஆஸ்ட்ரோனமிக்கல் சயின்ஸ் சொசைட்டி, எய்ட் இந்தியா, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் வடிவமைத்துள்ளன. பள்ளி மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்த வாழ்த்து அட்டை வழங்கப்படும். இதன் மூலம் சூரியனை பற்றிய அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

சூரிய பொங்கல் வாழ்த்து அட்டை

சூரிய பொங்கல் வாழ்த்து அட்டை

இந்த நிகழ்வில் அறிவியல் பலகையின் மாநில ஒருங்கிணைப்பாளர்  பா. ஶ்ரீகுமார்,  கே. கணேசன், தமிழ்நாடு அஸ்ட்ரானிமிக்கல் சயின்ஸ் சொசைட்டியின் உறுப்பினர்களான செல்லக்குமார்ஜெகதீஷ்,  உதயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Department of School Education, Greetings, Pongal, Pongal festival