Home /News /tamil-nadu /

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

MK Stalin | Tamil Nadu Lockdown | சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களை விட தற்போது கொரோனா தொற்று 2500 வரை சென்றுள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் கலந்து கொண்டார்.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை, கடைகளின் நேரத்தை குறைப்பது, இரவு நேர ஊரடங்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் விவாதித்து வருகிறார் .

    இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Lockdown, MK Stalin

    அடுத்த செய்தி