தமிழகத்தில் இன்று 1808 பேருக்கு கொரோனா: 10 மாவட்டங்களில் மட்டுமே உயிரிழப்பு!

கொரோனா டெஸ்ட் (Exposure Visuals / Shutterstock.com)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 100க்கும் மேலாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில்1,44,219 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒருவர் டெல்லியில் இருந்து தமிழகம் வந்தவர் அவர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,48,49 ஆக உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2447 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 24,91,222 பேர் வீடு திரும்பியுள்ளனர். 23,364 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர்.   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,911 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 100க்கும் மேலாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 169 பேருக்கும் ஈரோட்டில்  130 பேருக்கும் சென்னையில்  126 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இன்று 6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published: