தமிழகத்தில் இன்று 1,785 பேருக்கு கொரோனா: 5 மாவட்டங்களில் 100க்கும் மேல் பாதிப்பு!

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, சேலம், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 100க்கும் மேலாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,36,505, மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,50,282  ஆக உயர்ந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2361 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 24,93,583  பேர் வீடு திரும்பியுள்ளனர். 22,762 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 16 மாவட்டங்களில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5  பேரும் உயிரிழந்தனர்.   அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,911 ஆக அதிகரித்துள்ளது.

  இதையும் படிங்க: வலையில் சிக்கிய நண்டை மீண்டும் கடலில் விட்டால் பரிசு!

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 100க்கும் மேலாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  அதிகபட்சமாக கோவையில் 164 பேருக்கும் ஈரோட்டில்  127 பேருக்கும் சென்னையில்  122 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இன்று 5 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: 5 முக்கிய கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி: எங்கெங்கு தெரியுமா?

  Published by:Murugesh M
  First published: