தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா; 34 ஆயிரத்தை நெருங்கிய மொத்த உயிரிழப்பு!

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக 29 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 33,995 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  மொத்த உயிரிழப்பும் 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,55,199 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மேற்கு வங்கத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர் ஆவார்.  இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,53,805 ஆக உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,394 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 24,98,289  பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,521 ஆக சரிந்துள்ளது. கொரோனா பாதித்து இன்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 16 மாவட்டங்களில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்தனர்.  அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,995 ஆக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: மக்களின் வீடுகளை தேடி வரும் மருந்து, மாத்திரைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!


    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 100க்கும் மேலாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

    மேலும் படிக்க: இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!


    அதிகபட்சமாக கோவையில் 179 பேருக்கும் ஈரோட்டில்  140 பேருக்கும் சென்னையில்  164  பேருக்கும் , செங்கல்பட்டில் 117 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று தலா 7 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published: