தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு - 28 பேர் உயிரிழப்பு

கொரோனா பரவல்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏப்ரல் - மே மாதங்களில் உச்சமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல், சீராக குறைந்து வந்தது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்து வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,53,994 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,90,632 ஆக அதிகரித்துள்ளது.

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,911 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்தமாக 25,35,715 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,547 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 20,458 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 217 பேருக்கும், சென்னையில் 205 பேருக்கும், ஈரோட்டில் 170 பேருக்கும், தஞ்சாவூரில் 127 பேருக்கும், சேலத்தில் 123 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: