• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,668 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,668 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,62,548 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில், 1,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,97,603 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,887 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்தமாக 25,43,319 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,663 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 19,621 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 199 பேருக்கும், சென்னையில் 185 பேருக்கும், ஈரோட்டில் 158 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும், சேலத்தில் 85 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: