தமிழக ரேஷன் வெப்சைட் முடக்கம்... காரணம் என்ன?

இணையதளம்

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் வெப்சைட் பராமரிப்பு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் சேர்ப்பது அல்லது நீக்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.

  ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் இந்த தளத்தின் மூலமாகவே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்டு வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து கொண்டே வருகிறது.

  Also Read : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!

  ஒரே குடும்ப அட்டையில் கூட்டுக் குடும்பமாக பெயர்கள் வைத்திருப்போர்கள் தனியாக கார்டு கோரியும், புதிதாக திருமணம் செய்தோர்களும், இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  Also Read : புதிதாக ரேஷன் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதனை வழங்கும் பணியை ஆரம்பிக்க அரசு உத்தரவிட்டது.   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தமிழக ரேஷன் வெப்சைட் தற்போது பராமரிப்பு காரணமாக முடக்கப்பட்டுள்ளது. வேறு ஏதும் சந்தேகங்களுக்கு 1967 என்ற எண் மற்றும் support@tnpds.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: