HOME»NEWS»TAMIL-NADU»tamil nadu ranks second in list of best governed states riz

மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்...

இந்தியாவில் மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்...
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • Share this:

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான Public affairs மையம், ஒரு மாநிலத்தின் சமபங்கு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிகளின் தரவரிசையை வெளியிடுகிறது. அதன்படி, சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு 1.388 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு 0.531 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

Also read: துரைக்கண்ணு மறைவு அ.தி.மு.கவுக்கு பேரிழப்பு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசுக்கு 0.468 புள்ளிகளுடன் 4வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சிறப்பாக ஆட்சி நடைபெறும் சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது.

யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் சண்டிகர் முதலிடத்தையும், புதுச்சேரி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதல் இடங்களை பிடித்த மாநிலங்கள் அனைத்தும் தென் இந்தியாவிலேயே உள்ளன.

Published by:Rizwan
First published: