தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் விதமாக 6 பூச்சிக்கொல்லி மருத்துகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மனநல அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள், சாணி பவுடர் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் என்னும் அபாயகரமான, விஷத்தன்மை வாய்ந்த எலி மருந்தை விற்க தடை செய்வதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது,” தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. மேலும், வேளாண் இயக்குனரின் தரவுகளின் படி 2017-18ம் ஆண்டில் தமிழகத்தில் விவசாயிகளின் இறப்பிற்கான காரணம் பூச்சிக்கொல்லியில் இருக்கும் நச்சு பொருட்களால் நிகழ்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
Also see... உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்.. உதயநிதிக்கு வாழ்த்துக் கூறிய வைரமுத்து
அந்தவகையில், மோனோகுரோட்டோபாஸ், ப்ரொபெனோபஸ், அசிப்பேட், ப்ரொபெனோபஸ்+சைபர்மெத்ரின், க்ளோரோபைரிபோஸ்+ சைபர்மெத்ரின், க்ளோரோபைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Tamil Nadu