சிறை நன்னடத்தைக் கைதிகளுக்காக அமைக்கப்படும் 5 பெட்ரோல் நிலையங்கள்!

Five petrol Pumps set up for prisoners | பாளையங்கோட்டையில் சிறை வளாகத்திற்கு எதிரே பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

news18
Updated: January 27, 2019, 7:20 PM IST
சிறை நன்னடத்தைக் கைதிகளுக்காக அமைக்கப்படும் 5 பெட்ரோல் நிலையங்கள்!
பெட்ரோல் நிலையம்.
news18
Updated: January 27, 2019, 7:20 PM IST
தமிழகத்தில் 5 இடங்களில், நன்னடத்தை கைதிகளைக் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களை செயல்படுத்த, சிறைத்துறை முடிவெடுத்துள்ளது.

சிறைவாசிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், சிறை அங்காடிகள் மூலம் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் சில சிறைகளில் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு, அவையும் விற்பனைக்கு வருகின்றன.

தற்போது அடுத்த முயற்சியாக சிறைவாசிகளைக் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, சென்னை, கோவை, வேலூர் ஆகிய 5 இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


பாளையங்கோட்டையில் சிறை வளாகத்திற்கு எதிரே பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. பெட்ரோல் பங்க்கோடு, ஆவின் பாலகம், சிறை விற்பனையகமும் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் நன்னடத்தைக் கைதிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்கள் விடுதலைக்குப் பின் மக்களோடு இணைந்து வாழ்வதற்கு இந்த முயற்சி உதவும்.

பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் தலா 2 கோடி மதிப்பீட்டில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலைய பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதில் பணிபுரிய பாளையங்கோட்டை சிறையில் இருந்து நன்னடத்தை சிறைவாசிகள் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அவர்களே பெட்ரோல் நிரப்புதல், பணம் பெறுதல், காற்று அடைத்தல் உள்ளிட்ட பெட்ரோல் நிலைய பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் பெட்ரோல் நிலையத்தில் 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Loading...

பெட்ரோல் நிலைய பணியார்களைப் போல சிறைவாசிகளுக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் சீருடை வழங்கப்பட்டுள்ளது அவர்கள் வாடிக்கையாளர்களை கனிவுடன் வரவேற்பதுடன் பெட்ரோல் டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய சிறைத்துறை டிஐஜி பழனி, ‘‘தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் சிறைவாசிகள் மாறுபட்ட சூழ்நிலைகளில் பணியாற்ற முடியும்’’ என்றார் ஏற்கனவே பாளையங்கோட்டை மத்திய சிறை மூலம் சிறை அங்காடி திறக்கப்பட்டு அதன் மூலம் காய்கறிகள் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதன் மூலம் சிறைவாசிகள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். தவறிழைத்து தண்டனை பெற்ற நிலையில் நன்னடத்தை காரணமாக சிறைவாசிகளும் சாதரண குடிமகன் போல சமுதாயத்தில் தலை நிமிர வாய்ப்பாக அமைந்துள்ளது.

Also Watch...

First published: January 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...