தமிழக சிறைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி முதல் சிறை கைதிகளை உறனவிர்கள் சந்திப்பது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு பதிலாக வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன், சிறைகளுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வழங்கப்பட்டு, சிறைவாசிகள் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் செய்யவும், e-Mulakat வசதியின் வாயிலாக காணொலி மூலம் பேசவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
உறவினர்களை நேரடியா சந்திக்கும் நடைமுறையை மீண்டும் தொடங்கக்கோரி சிறைக் கைதிகளின் உறவினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையும், கொரோனா வைரஸ் பரவும் வீதம் படிப்படியாக குறைந்து வருவதையும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதையும், சிறைகைதிகளின் நலனை கருத்தில் கொண்டும், சிறைகைதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரடியாக சந்திக்கும் நடைமுறை 16-ம் தேதி முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் தொடங்கப்படுவதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அறிவித்துள்ளார்.
சிறைகைதிகளைச் சந்திக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்த வழிமுறைகளை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
அதன்படி சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் prisons Visitors Management System அல்லது அந்தந்த சிறைகளின் தொலைபேசி மூலம் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஒரு சிறைகைதிகளை காண அதிகபட்சமாக இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஒரு சிறைக் கைதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பார்வையாளர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்.
சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க விரும்பும் பார்வையாளர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் (அல்லது) 72 மணி நேரத்திற்குள் கொரோனா RT-PCR பரிசோதனை செய்து தொற்று இல்லை என அளிக்கப்பட்ட சான்றிதழ் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சந்தித்துக்கொள்ள 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை சுத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகக்கவசத்துடன்
சிறையினுள் அனுமதிக்கப்படுவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு நேரில் சந்திக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், நேரில் சந்திக்கும் மனுக்கள் ஆகியவை பார்வையாளர்கள் அறையின் நுழைவாயிலில் வழங்கப்படும்.
www.prisons.tn.gov.in பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.