போகியன்று பழைய பொருட்களை எரிப்பவரா நீங்கள்? உஷார்…

’மாசில்லா போகி’ என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 10:20 PM IST
போகியன்று பழைய பொருட்களை எரிப்பவரா நீங்கள்? உஷார்…
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: January 12, 2019, 10:20 PM IST
போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை  கொண்டாடப்படுவது வழக்கம். போகி பண்டிகையின்போது பயனற்ற, பழைய பொருட்களை  எரிப்பது மக்களின் வழக்கம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தாலும் கூட காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த பழக்கத்தை, மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ‘மாசில்லா போகி’ என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலபேர் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிக்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஷம்பு கல்லோலிக்கர், “போகிப் பண்டிகையில் பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட  பொருட்களை எரித்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்வோர் மீது அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க சென்னையில் 30 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும், மற்ற மாவட்டங்களில்,  அந்தந்த மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

also see

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...