ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்: தினகரனை சாடிய சி.வி.சண்முகம்

சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்: தினகரனை சாடிய சி.வி.சண்முகம்

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். அவர் அடிக்கடி ஸ்லீப்பர் செல் ஸ்லீப்பர் செல் என்று சொல்வார், ஆனால் ஸ்லீப்பர் செல் எல்லாம் கிடையாது ஓபன் செல்தான், அது டிடிவி தினகரன் தான்.

டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ’வா ராஜா இத நல்லா பாத்துக்கோ, 4 வருஷம் கழிச்சு நான் திரும்பி வரும்போது அப்படியே கட்சியை என் கையில் கொடுன்னு சொல்லிட்டுப் போனார்’ ஆனால் அவர் ஒரே மாதத்தில் அதை உடைத்துவிட்டார். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றச் சொல்லுங்கள்.

நான் நிதானமாக பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள்.

கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது. அ.தி.மு.க. என்பது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இனி ஒருபோதும் சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் சிக்காது.

என்றார் சி.வி.சண்முகம்.

First published:

Tags: Politics, Sasikala, Tamil Nadu, TTV Dhinakaran