தமிழ்நாட்டில் அதிமுக 50 ஆண்டு காலம் கடந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் பல்வேறு உச்சபட்ச வெற்றிகளையும், அதே போல தோல்விகளையும் கண்ட கட்சி அது. அந்தக் கட்சியின் நகர செயலாளராக இருந்து முதலமைச்சர் வரை உயர்ந்து கட்சியின் தலைமை பொறுப்பு வரை வகித்த ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பல இழப்புகளை சந்தித்து வருகிறார்.
ஓபன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95வயது) கடந்த 24ஆம் தேதி இரவு வயது முதிர்வரின் காரணமாக தேனியில் மரணித்தார். பழனியம்மாளின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், ஆறுதல் தெரிவித்து இரங்கல் கூறினர்.
தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி பழனியம்மாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதே போல நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி அவருடைய தாயார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.அதே வேளையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஓ.பி.எஸ் தாயார் மறைவிற்கு இரங்கல் குறிப்பு கொடுக்கவில்லை.
ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தில் அவரது சகோதரர் அவரது மனைவி நெருங்கிய உறவினர்கள் இருவர் என அடுத்தடுத்து தொடர்ந்து துக்க நிகழ்வுகள் அவரது இல்லத்தில் ஏற்பட்டுள்ளது, அதேபோல அரசியலிலும் அவருக்கு தொடர் சறுக்கல்கள் இருந்து வருகின்றார் இதனால் தனிப்பட்ட முறையில் கடுமையான மனவருத்தத்தில் இருக்கிறார்.
அடுத்த சில நாட்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தேனியிலேயே இருந்து தனது தாய்க்கு செய்ய வேண்டிய சடங்குகளை முடித்த பின்னர் அடுத்த கட்டமாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் திருச்சியில் அதிமுக தொடங்கிய ஐம்பதாவது ஆண்டு, ஜெயலலிதா பிறந்தநாள், எம்ஜிஆர் பிறந்தநாள் ஆகியவையை உள்ளடக்கி முப்பெரும் விழா ஒன்றை மாநாடாக நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தயாராகி வருகிறது.இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் , வி.கே. சசிகலா ஆகியோரது சந்திப்பு குறிப்பு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் சிவில் கோர்ட்டில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு தீர்மானங்கள் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தீவிர படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்ட நிலையில் அதுகுறித்து நேரிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட திட்டம் வைத்துள்ளது ஓ.பி.எஸ் தரப்பு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: O Panneerselvam, Tamil News