ரஜினியின் கட்சி அறிவிப்பைக் கண்டு அரசியல் கட்சிகள் அச்சம் - தமிழருவி மணியன்

ரஜினியின் கட்சி அறிவிப்பைக் கண்டு அரசியல் கட்சிகள் அச்சம் - தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் - தமிழருவிமணியன்

ரஜினியின் கட்சி அறிவிப்பை கண்டு அரசியல் கட்சிகள் அச்சம் கொள்வது வெளிப்படையாக தெரிவதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சித் தொடங்குவாரா? இல்லையா? என்பது பல வருடங்களாக கேள்விக்குறியாக இருந்தநிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவேன் என்றும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பேன் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அறிவித்தார். இந்தநிலையில், ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன மூர்த்தியும், சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினியுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், கட்சியின் செயல் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக குறிப்பிட்டார். டிசம்பர் 31ல், கட்சி தொடங்கப்படும் தேதியை ரஜினி அறிவிப்பார் என்றும், கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி தொடர்பான அனைத்து தகவல்களும், ரஜினி மூலமாகவே அறிவிக்கப்படும் என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து பேசவில்லை என்றும் தமிழருவி மணியன் கூறினார்.

  ரஜினி கட்சி தொடங்கினால் தங்களுக்கு பாதிப்பில்லை என திமுகவும், அதிமுகவும் கூறுவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாதிப்பில்லை என்று அவர்கள் கூறுவதில் இருந்தே, பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருவதாக கூறினார்.

  இதற்கிடையே, உலகில் யாரும் செய்யாத வேலையை ரஜினி செய்துள்ளதாகவும், அவரது அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்பது, பாசிச அரசியல் எனவும், அது வெறுப்பு அரசியல் என்றும் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: