ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நவம்பர் 6-ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி : டிஜிபி உத்தரவு

நவம்பர் 6-ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி : டிஜிபி உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். பேரணி

ஆர்.எஸ்.எஸ். பேரணி

தமிழ்நாட்டில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அக். 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

    விஜயதசமி, 75-வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்... திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரபரப்பு அறிக்கை!

    இந்நிலையில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மாவட்ட எஸ்.பிகளுக்கு டிஜிபி அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில், ‘நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம், ஒழுங்கு, சூழலுக்கு ஏற்றவாறு அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: RSS, TN Police