தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.15 கோடி அபராதம் வசூல்... காவல்துறை தகவல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.15 கோடி அபராதம் வசூல்... காவல்துறை தகவல்
கோப்புப்படம் (PTI)
  • Share this:
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து 15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் கடந்த மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்டு, தற்போது 5ம் கட்ட பொதுமுடக்கம் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அன்று முதல் இன்றுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்த அபராத தொகை விவரத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15.99 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



Also read... கொரோனாவை தடுக்க பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் - பீலா ராஜேஷ்

7,61,000 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், 5,71,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 6,96,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading