Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்புவோரை பிடிக்க தனி குழு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவிப்பு

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்புவோரை பிடிக்க தனி குழு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவிப்பு

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை ஏற்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக ஊடக் குழுக்களை அமைத்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், யூ-டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுபோல, இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை உள்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி கூறியுள்ளார்.

    2022ல் அதிக கடன் உள்ள முதல் 10 நாடுகள் எவை தெரியுமா?

    சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும் இந்தக் குழுவில் கணினி சார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக  டிஜிபி தெரிவித்துள்ளார்.

    பொய்யான பதிவுகளை பரப்புவோரை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தடுக்கவும் அவர்களது கணக்குகளை முடக்கவும் இக்குழு துரிதமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும் என்றும் டிஜிபி கூறியுள்ளார்
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Social media, Sylendra Babu

    அடுத்த செய்தி