நாளை முதல் ஊரடங்கு உத்தரவை மீறினால் நடவடிக்கை - தமிழக காவல்துறை எச்சரிக்கை

மாதிரிப்படம்

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுதல் தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு 10-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முகக் கவசம் அணிவது, கிரிமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுத்தப்பட்டது.

  10-ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிப்பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கிவந்தனர். இந்த அறிவுரைகளை பொதுமக்கள் ஒரு சில சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

  நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இந்த காலத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: