ஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி

ஊரடங்கு(மாதிரிப் படம்)

ஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம் என்று மாநில காவல்துறைத் தலைவர் திரிபாதி அறிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி தற்போது மெல்லமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2.63 லட்சமாக குறைந்தது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கவில்லை. தற்போதுவரை தமிழத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 33,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

  அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால், படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டுவருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், மாவட்டங்களுக்குள் பயணிக்கவும் இ-பதிவு அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும் இ-பதிவு ஆவணங்களைக் கோரி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

  மேலும், ஊடகவியலாளர்களிடையேயும் இ-பதிவு ஆவணங்களைக் கோரி காவல்துறையினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திவெளியானது. இந்தநிலையில், காவல்துறைத் தலைவர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் அவர்களுடைய சொந்த அடையாள அட்டையப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்துகொள்ளலாம். இ-பதிவு தேவையில்லை’ என்று அறிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: