முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக அரசின் அனைத்துத் துறை அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்: வழக்கு மாற்றம்

தமிழக அரசின் அனைத்துத் துறை அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்: வழக்கு மாற்றம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதை நீதிபதி, பொது நல மனுவாக மாற்றி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக அரசின் அனைத்துத் துறை அலுவலகங்கள், கட்டிடங்களில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் முதுவை இளையராஜா இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தன் மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு துறைகளின் பல்வேறு அலுவலகங்களில், பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கோரினால், அதிகாரிகள் சரியாக விபரம் தெரிவிப்பதில்லை. மோடியின் படம் இடம் பெறுவதில், சில அதிகாரிகளுக்கு விருப்பமில்லாதது தெளிவாகிறது.ராமநாதபுரம் மாவட்டம், போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மோடி படம் இடம் பெற வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை.

தலைவர்கள் மற்றும் பிரதமரின் படம் இடம் பெற வேண்டும் என்ற அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும்.மோடி, 2014 முதல் பிரதமராக தொடர்கிறார். அவரது பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும். இதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிற்கு இடமளிக்கக் கூடாது. அரசாணைப் படி, தமிழக அரசின் அனைத்துத் துறை அலுவலகங்கள், கட்டடங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற நடவடிக்கை எடுக்க பொதுத்துறை செயலர், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், என்று கோரியிருந்தார்.

இதை நீதிபதி, பொது நல மனுவாக மாற்றி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: PM Modi, Tamil Nadu govt