• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யு.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழர்களால் பெருமளவு சாதிக்க முடியாதது ஏன்?

யு.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழர்களால் பெருமளவு சாதிக்க முடியாதது ஏன்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாட்டின் உயர் அதிகாரிகளை உருவாக்க அடித்தளமாக உள்ள சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சோபிக்க முடியாமல் போவதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

  • Share this:
    இந்திய மாநிலங்களில் கல்வியில் முன்னணியில் உள்ளவற்றில் தமிழகமும் ஒன்று. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தேர்வில் 5 முதல் 7 சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். 2014ஆம் ஆண்டில் 1,236 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்திலிருந்து 10 சதவிகிதத்தினர், அதாவது 118 பேர் தேர்வாகினர். 2015ஆம் ஆண்டில் மொத்த பணியிடங்களான 1,078ல் 8 சதவிகிதமான 82 பேர் தேர்வாகினர்.

    2016ல் தேர்ச்சி சதவிகிதம் 7ஆகக் குறைந்தது. 2017ல் மேலும் குறைந்து 4 சதவிகிதமானது. 2018ல் தேர்ச்சி விகிதமாக 5 சதவிகிதம் இருந்தாலும், 39 பேர் மட்டுமே தேர்வாகினர். 2019ல் மீண்டு சற்று அதிகரித்து 7 சதவிகிதம் ஆனது. ஆனால், 2020ல் மொத்தமுள்ள 761 பணியிடங்களில் 36 பேர் மட்டுமே தமிழகத்திலிருந்து தேர்வானதாகக் கூறப்படுகிறது. அதாவது 4.7 சதவீதம்.

    அதிகாரப்பூர்வமாக மாநில வாரியாக முடிவுகள் வெளியிடப்படாததால் தோராய எண்ணிக்கையிலேயே இந்த புள்ளி விவரங்கள் கணக்கிடப்படுகின்றன. குறைவான தமிழக பங்கீட்டிற்கு பல முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியளித்தல் மிகப்பெரும் சந்தையாக மாறி இருப்பதால், அளவுக்கு அதிகமான தேர்வர்கள் சேர்க்கப்பட்டு தனிப்பட்ட பயிற்சி கிடைக்காமல் போகின்றனர் எனக் கருதப்படுகிறது. வெறும் தேர்வாக அல்லாமல் ஒரு ஆளுமையை உருவாக்கக்கூடிய தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள முறையான வழிகாட்டுதல் அவசியமாகிறது என்கின்றனர் துறை சார்ந்தவர்கள்.

    வேறு சில காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆய்ந்தறியும் வகையிலான கற்பித்தல் முறை நமது பள்ளிக் கல்வியில் இல்லாதது, இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கான முன்னோட்டம் நம் மாணவர்களுக்கு இல்லாமல் போனதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. அதனால்தான், மருத்துவம் பயின்று முடித்த ஒருவரால் 5 ஆண்டுகள்வரைகூட சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படுவதில்லை என்பதும் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாணவர்களும் தங்களுக்கு பின்னடைவாக பார்க்கின்றனர். தமிழ் மொழியில் தேர்வெழுத நினைப்பவர்களுக்கு போதிய புத்தகங்கள் இல்லாமை, மதிப்பீட்டாளர்கள் முறையாக இல்லாததும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இப்படி தேர்வு முறையின் மீதான குறைபாடுகள் ஒருப்புறமிருக்க, அடிப்படையான கல்வி சார்ந்த் அணுகுமுறைகளை மாற்ற வேண்டி இருக்கிறது அரசும், மாணவர்களும் உணர வேண்டி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: