முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சங்கராபுரம் ஊராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் - தமிழக மக்கள் மன்றம் கோரிக்கை

சங்கராபுரம் ஊராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் - தமிழக மக்கள் மன்றம் கோரிக்கை

சங்கராபுரம் ஊராட்சி

சங்கராபுரம் ஊராட்சி

  • Last Updated :

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருக்கு தமிழக மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக,தமிழக மக்கள் மன்றத்தின் தலைவா் ச.மீ.ராசகுமாா், சென்னையில் உள்ள மாநில தோ்தல் ஆணையருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், சிவகங்கை மாவட்டம், சக்கோட்டை ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்திற்கான உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட குழப்பமான முடிவினால் இன்றுவரை யாரும் ஊராட்சி தலைவராக பதவி ஏற்காமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்ட இருவரில் முதலில் தேவி என்பவருக்கு வெற்றிச் சான்றிதழும், பிறகு அது செல்லாது என பிரியதர்சினி என்பவருக்கு வெற்றிச் சான்றிதழும் வழங்கப்பட்டது . உடனே தேவி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பிரியதர்சினியின் பதவிப்பிரமாணத்திற்கு தடை பெற்றார்.

விசாரணைக்கு பிறகு உயர் நீதிமன்றம் "முதலில் வழங்கப்பட்ட சான்றிதழே செல்லும்" என தீர்ப்பு வழங்கியது இதனால் உச்ச நீதிமன்றம் சென்ற பிரியதர்சினி தேவிக்கு கிடைத்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்து நிறுத்தினார். இப்படி இரு அணியினரும் தேர்தல் எண்ணிக்கை தொடங்கி மாறிமாறி பட்டாசு வெடித்து தங்களின் வெற்றியினை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்காக இரு அணியினரும் காத்திருக்கும் வேளையில், யார் வெற்றி பெற்றதாக அறிவித்தாலும் அந்த வெற்றி மக்களிடையே சந்தேகத்துடன் மட்டுமே அந்த வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள நேரிடும். மக்களால் ஓட்டுப்போட்டு வெற்றி பெற்று ஆட்சி நடத்தினால் மட்டுமே அது மக்களாட்சி ஆகும்.

இப்போது நீதிமன்றம் எந்த தீர்ப்பினை வழங்கினாலும் அது நீதிமன்றத் தீர்ப்பாகத்தான் இருக்குமே தவிர மக்களின் தீர்ப்பாக இருக்காது. எனவே கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சியின் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஆனதற்கும், அந்த வெற்றி அறிவிப்பு சந்தேகத்திற்குரியதாய் ஆனதற்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்கவேண்டும்.

எனவே தேர்தல் ஆணையம் தேர்தல் செலவினைக் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் சங்கராபுரம் தொகுதியில் "ஊராட்சி மன்றத் தலைவருக்கான" தேர்தலை நடத்த வேண்டும். அதுவே தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் ஜனநாயகத்தினை நிலை நாட்டுவதற்கும் சிறந்த வழியாகும் என்று தமிழக மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு மனு அனுப்பட்டுள்ளது.

top videos

    First published:

    Tags: Election, Local Body Election 2019