Home /News /tamil-nadu /

ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

ஊராட்சி செயலர்களிக்கு துறையில் கொடுக்கப்படும் அதீத பணிச்சுமைகளை களையும் நோக்கிலும், மன அழுத்தங்களை குறைக்கும் நோக்கிலும், நெடுங்காலமாக கோரி வருகின்ற கோரிக்கைகளின் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வேலைநிருத்தம் அறிவிப்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  கடுமையான பணி அழுத்தத்தை களைந்திடவும், நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தியும் தமிழ்நாடு ஊராட்ச்சி சங்கம் கவன ஈர்ப்பு நடவடிக்கையாக மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஊரக வளர்ச்சித்துறையின் ஆணிவேராம் ஊராட்சி செயலர்களிக்கு துறையில் கொடுக்கப்படும் அதீத பணிச்சுமைகளை களையும் நோக்கிலும், மன அழுத்தங்களை குறைக்கும் நோக்கிலும், நெடுங்காலமாக கோரி வருகின்ற கோரிக்கைகளின் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  தமிழக அரசிற்கு ஆதரவாக என்றும் இருந்து வரும் இவ்வமைப்பு தற்போது அலுவலர்களின் உயர் அழுத்தம் காரணமாக கவன ஈர்ப்பு நடவடிக்கைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஏகோபித்த உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இரண்டுகட்ட இயக்க நடவடிக்கை மாநிலம் தழுவி மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  ஊராட்சி செயளர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் எண்ணிலடங்கா பணி அழுத்தங்களை சந்தித்து வருகின்றனர். ஒரே பணியாளர் ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட பணிகளை செய்யவேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. இதனால் ஊராட்சி செயலர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சாலை விபத்துகளை சந்திப்பதும், கடும் மன அழுத்த நோய்களுக்கு ஆளாவதும், பணியிடத்திலிருந்து மன நிம்மதி தேடி குடும்பத்தை நிர்கதியாக தவிக்க விட்டு வீட்டினை விட்டு வெளியேறுவதும், இதய அடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் உயிரினை இழப்பதும் மிக அதிகரித்து உள்ளன. எனவே ஊராட்சி செயலரின் உடல்நலம், மன நலம் காக்க உடனடி நடவடிக்கை தேவை. எனவே நமது துறையில் இப்போதுள்ள பணி நெருக்கடியை தமிழக அரசு முற்றிலும் கைவிட கோருதல்.

  Also Read : பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு கலைப்பு - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

  2. பல்வேறு மாவட்டங்களில் பல ஊராட்சி தலைவர்கள் ஊதியம் அனுமதிப்பதில் மிக தாமதம் செய்வதாலும், பல தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதாலும் ஊராட்சி செயலர்களின் நெடுங்கால கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் பெறும்வகையில் உடனடியாக உத்தரவினை பிறப்பித்து ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் பெறுவதனை உறுதி செய்தல்.

  3. ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புதல், புதிய பணிவிதிகள் அரசாணையை வெளியிடுதல், ஓய்வீதியம் உயர்த்தி வழங்குதல், பென்சன் திட்டத்தில் சேர்தல் ஆகிய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற கேட்டல்.

  எனவே மேலே கண்ட கோரிக்கையை முன்வைத்து முதற்கட்ட கவன ஈர்ப்பு இயக்க நடவடிக்கையாக எதிர்வரும் 12.09.2022 திங்கள் முதல் 14.09.2022 புதன் வரை மொத்தம் 03 நாட்கள் தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊராட்சி செயலரும் ஊதியமில்லா விடுப்பை துய்ப்பார்கள். அடுத்தகட்டமாக தொடர் விடுப்பு நடவடிக்கை முழு அளவில் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது!

  எனவே எங்களின் இக்கட்டான நிலை கருதி மேற்கண்ட கோரிக்கைகளின்பால் தனிகவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டுகிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Raj Kumar
  First published:

  Tags: Panchayat, Strike

  அடுத்த செய்தி