தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,672 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ கடந்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நேற்றைய தினம் 17,092 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்து 16,103 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,82,775 ஆக அதிகரித்துள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 14,504 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,487 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இன்று மட்டும் சென்னையில் 1,072 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோயம்புத்தூரில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.