தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு..

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைக்கு மார்ச் 24-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, பேருந்து, ரயில் சேவைகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் மாநிலங்களுக்குள்ளான பேருந்து சேவைக்கு கடந்த மாதம் 7-ம் தேதி தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் இயக்கப்படாத ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களுக்கு இழப்பீடு, சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.

மேலும் படிக்க...சென்னை- கீழ்ப்பாக்கம்: மதபோதகர்கள் மீது பாலியல் தொல்லை வழக்கு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?இந்நிலையில், ஆம்னி பேருந்துகளை நாளை முதல் இயக்க உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.பேருந்துகளை இயக்கும்போது, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என்று உறுதியளித்துள்ள அவர், சாலை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading