ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது... இனி வெளுத்து வாங்க போகுது மழை...

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது... இனி வெளுத்து வாங்க போகுது மழை...

மழை

மழை

தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 48 சதவீதம் வட கிழக்கு பருவமழைக் காலத்தில் தான் பெய்கிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வடகிழக்கு பருவ மழை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுவையிலும் இன்று  தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ் நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.  தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 48 சதவீதம் வட கிழக்கு பருவமழைக் காலத்தில் தான் பெய்கிறது. இதில், கடலோரப் பகுதிகளுக்கு 60 சதவீதமும் மற்ற பகுதிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை கிடைக்கும்.

    ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி, வடகிழக்கு பருவ மழை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுவையிலும் இன்று 29 அக்டோபர் 2022 துவங்கியுள்ளது

    Published by:Murugesh M
    First published:

    Tags: North East Monsoon, Rain