ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குகிறது... 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குகிறது... 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

North east monsoon: கடலோரப் பகுதிகளுக்கு 60 சதவீதமும் மற்ற பகுதிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை கிடைக்கும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழ் நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.  ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

  இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 48 சதவீதம் வட கிழக்கு பருவமழைக் காலத்தில் தான் பெய்கிறது.

  இதில், கடலோரப் பகுதிகளுக்கு 60 சதவீதமும் மற்ற பகுதிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை கிடைக்கும். இதனிடையே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஒன்றாம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதில், இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை,  தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

  இதையும் படிக்க: நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19% ஆக அதிகரித்த மத்திய அரசு...

  சென்னையில் 24 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: North East Monsoon, Rain