'தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ்' : தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..

அதிமுகவில் நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

'தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ்' : தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
  • Share this:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவில் நடைபெற்ற குழப்பங்கள் அனைவரும் அறிந்ததே. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் யார் என அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என இந்த விவகாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

அவரைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அவர் அவர் பங்கிற்கு அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்டமான தேனியில் 202-இல் தமிழக முதலமைச்சர், அம்மாவின் ஆசி பெற்ற முதல்வர், நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் போடிநாயக்கனூர், பெரியகுளம், தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெஞ்சம்பட்டி பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களிலுமே ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...தடையை மீறி சதுர்த்தி கொண்டாடப்படும் என அறிவித்த இந்து அமைப்புகள்: ரகசிய இடத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மகன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியது என்றே சொல்லலாம்.
First published: August 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading