Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதா எங்களுக்கு வரவில்லை.. மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதா எங்களுக்கு வரவில்லை.. மத்திய அரசு விளக்கம்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

NEET Exemption Bill : குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது.

    தமிழகத்திற்கு நீட் விலக்கு (Neet Exemption) கோரிய மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

    தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெற்றதா? மேலும் தமிழக அரசின் குழு இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசை அணுகி கோரிக்கை எதும் முன்வைத்ததா? இவ்விவகரத்தில் மத்திய அரசின் பதில் என்ன? என மக்களவையில் அ.ராசா கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்,

    "குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது.

    அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின் படி நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசால் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுபட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை'' என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Neet Exam

    அடுத்த செய்தி