Home /News /tamil-nadu /

நீட் தேர்வு விலக்கு: மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக எம்.பிக்கள் மனு

நீட் தேர்வு விலக்கு: மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக எம்.பிக்கள் மனு

தமிழக எம்.பிக்கள்

தமிழக எம்.பிக்கள்

Neet exam | நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் கடிதம் அளித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபிறகு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

    ஆனால், நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில்தான் உள்ளது.

    நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மக்களவை தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகம் சென்று குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு மனு அளித்துள்ளது. அதில், நீட் மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Neet Exam, Tamil Nadu

    அடுத்த செய்தி