முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் குழு இன்று அமித்ஷாவை சந்திக்கிறது

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் குழு இன்று அமித்ஷாவை சந்திக்கிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

  • 1-MIN READ
  • Last Updated :

    நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்பிக்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்திக்கின்றனர்.

    நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. இக்குழுவும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தது.

    சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு, நேற்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மனுவை குடியரசு தலைவரிடம் அளித்தனர்.

    Must Read : சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அதனை தொடர்ந்து இந்த குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த சந்திப்பின் போது, நீட்தேர்வுக்கு விலக்கு கோரி மனு அளிக்க இருக்கிறது.

    Read More : புத்தாண்டு கொண்டாட்டம் : தடை, கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை காவல்துறை அறிவிப்பு

    இதனிடையே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜ்ந்திரபாபு, தகவல் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் மாளிகை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

    First published: