மத்திய அரசின் தொடர் நிர்பந்ததால் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த நேர்காணலில், “தமிழகத்தில் மொத்தமாக 3.53 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். வீடு உபயோகம் மற்றும் குடிசை மின் பயன்பாட்டாளர்கள் 2.37 கோடி பேர் உள்ளனர். இந்த 2.37 கோடி பயனாளர்களில் ஒரு கோடி பயனாளர்களுக்கு மின்கட்டணத்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை. 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
விசைத்தறி, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் இவை எல்லாம் தொடர்ந்து நடைமுறையில் கொண்டு வருவதற்கான திட்டமிடல் இருக்கின்றன.இலவச மின்சாரங்களை சேர்த்து 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்தக்கூடிய அந்த மின் பயனாளர்களுக்கு அரசு ஏற்கனவே ஒரு ரூபாய் மாணியம் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டது. அது தற்போது 2.25 பைசாவாக மாணியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்றார்.
மத்திய அரசானது மின்சார வாரியத்துக்கும் ஒழுங்கு முறை ஆணையத்துக்கும் தொடர்ந்து கடிதங்களை அனுப்பி உள்ளன. ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் REC, PFC போன்ற நிதி நிறுவனங்களும் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். மின்சார கட்டணத்தை மாற்றிய செய்ய வேண்டும் உயர்த்தப்பட வேண்டும் என 28 கடிதங்களை அனுப்பியுள்ளனர். அப்படி மின்கட்டணங்களை உயர்த்தப்படவில்லை மாற்றம் செய்யப்படவில்லை என்றால் மத்திய அரசு வழங்கக்கூடிய 10 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட அந்த மானியம் தொகை நிறுத்தி வைக்கப்படும் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படமாட்டாது என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் 1லட்சத்து59 ஆயிரம் கோடி 2021-ம் ஆண்டின் கடன். ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ 16,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்தக்கூடிய சூழல். இந்நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நீங்கள் கடன் வழங்கக்கூடாது என ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார்கள். திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். மானியங்களை கொடுக்க மாட்டோம். வங்கிகள் கடன் வழங்கக்கூடாது என்ற நிர்பந்தத்தின் காரணமாகவே ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்துவதன் காரணமாகவே இப்போது மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.